தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள இருதயப் பிரிவில் ஆண்டுக்கு 9 ஆயிரம் புறநோயாளிகள் பரிசோதனை செய்கின்றனர் என, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நேரு தெரிவித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இருதய சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணி யாற்றிய செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.நேரு பேசியதாவது:
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் புறநோயாளியாக ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்கின்றனர். மேலும், 1,400 பேர் வரை இருதய நோய்களுக்கான ஸ்கேன் எடுக்கின்றனர். தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிநவீன சிகிச்சையில் ஆஞ்சியோ பிளாஸ்ட் 100 பேருக்கும், ஆஞ்சியோகிராம் 250 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது, என்றார் அவர்.
இருதய பிரிவு முதுநிலை உதவி பேராசிரியர்கள் ஆர்.பாலமுருகன், எஸ்.கணேசன், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் சி.இளங்கோ, ஜெ.பரத் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago