உதகையில் இரண்டாவது சீசனையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் 4,000 மலர் தொட்டிகளை கொண்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த ஆண்டு இரண்டாம் சீசனையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2.4 லட்சம் மலர் செடிகளைக் கொண்டு பாத்திகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் டேலியா, சால்வியா, சென்டோரியா, இன்கா மெரிகோல்டு, பிரெஞ்ச் மெரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டூலா, டயான்தஸ், கிரசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா உட்பட்ட பல்வேறு ரகங்கள் அடங்கிய 12,000 மலர் தொட்டிகள் காட்சி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 4,000மலர் தொட்டிகளை கொண்டு செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம், இன்றுமுதல் சுற்றுலா பயணிகளின்பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, ‘‘உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள காட்சி மாடம் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாதம் திறந்துவைக்கப்படும். தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக பல்வேறு மலர் ரகங்கள் கொண்ட மலர் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago