திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' இயக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத்து கூறியது:
புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் மூலம் 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எழுதுதல், வாசித்தல், எளிய வாழ்க்கை கணக்குகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை மேற் கொள்ளும் முறைகள் குறித்த அடிப்படை அறிவை வளர்க்க சிறப்பு தன்னார்வலர்கள் மூலம் பயிற்சியளிப்பதே ‘கற்போம் எழுதுவோம்' எனும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செப்.25, 26, 27 ஆகிய 3 நாட்கள் அனைத்து ஒன்றியங்களிலும் 9 கலைநிகழ்ச் சிகள் நடத்தப்பட உள்ளன. அதன் முதல் நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெறுகிறது என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன், கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலிய பெருமாள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித்திட்ட அலுவலர் எம்.பாலசுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மணிவண்ணன், பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கல்வி கற்பதன் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கற்போம், எழுதுவோம் இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இரூர் ஓசைக் கலைக்குழுவைச் சேர்ந்த லீலா சாமிராசு குழுவினர் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.முருகேசன் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெ.பிரபா கரன் வரவேற்றார். ‘கற்போம் எழுது வோம்’ இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதே வன், குணசேகரன், வேப்பந்தட்டை வட்டார வள மைய மேற்பார்வை யாளர் ராஜேஸ்வரன், கலைக்குழு ஆசிரியர் ராமதாஸ் ஆகியோர், ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினர்.
தழுதாழை ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி ராஜேஷ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக, சாரண ஆசிரியர் ப.மணிமாறன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago