குடியரசுத் தலைவர் விருது பெற்ற - கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

2019-2020-ம் ஆண்டில் நாட்டுநலப் பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட 54-வது அணிக்கும், அதன் திட்ட அலுவலரான வரலாற்றுத் துறை தலைவர் ஆ.தேவராஜுக்கும் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் விருது வழங்கினார்.

விருது பெற்ற கல்லூரி முதல்வர் து.நாகராஜன், பேராசிரியர் ஆ.தேவராஜ் ஆகியோருக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. காமராஜ் கல்லூரியின் செயலாளர் சோமு தலைமை வகித்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கோ. நாராயணசாமி, துணைத் தலைவர் நடராஜன், பொருளாளர் ரா.முத்துச்செல்வம், காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் பா. விநாயகமூர்த்தி, காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் க. ஆனந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜோசப் பீட்டர், பேராசிரியர்கள் பா. பொன்னுத்தாய், ஜெ. நாகராஜன், முரளி, கல்லூரி கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்