அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட - மலைக்கிராம சாலைகள் 4 நாளில் தற்காலிக சீரமைப்பு : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு

By செய்திப்பிரிவு

அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட நெக்கினி, தானிமரத்தூர் உள்ளிட்ட மலைக்கிராம சாலை களை 4 நாட்களுக்குள் தற்காலிக மாக சீரமைக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மலைக் கிராம மக்களிடம் தொய்வு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அமிர்தி அருகேயுள்ள பெலாம் பட்டு, நெக்கினி, கொளயம், தானி மரத்தூர், அரசமரத்தூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பெலாம்பட்டு, நெக்கினி, கொளயம் கிராமங்களில் நடை பெற்ற முகாமை ஆய்வு செய்ததுடன் இரு சக்கர வாகனத்தில் கரடு முரடான மலைப் பாதையில் நெக்கினி, தானிமரத்தூர் கிராமங்களுக்கு அவர் பயணம் செய்தார்.

அப்போது, மலைக் கிராமங் களில் தடுப்பூசி செலுத்த தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும்படியும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மலைக் கிராம மக்களுக்கான மருத்துவ சேவைக்கு வேன் வசதி அளிக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதையில் செல்ல முடியவில்லை என்றும், அதற்கு பதிலாக ஜீப் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவக்குழுவினர் கோரிக்கை வைத்தனர். இதனை, பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.

ஜவ்வாது மலைத் தொடரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைக்கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பாதை மண் சரிவால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 நாட்களுக்கு சாலைகளை தற்காலிகமாக சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, அணைக்கட்டு வட்டாட்சியர் பழனி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘ஏற் கெனவே அணைக்கட்டில் இருந்து பீஞ்சமந்தைக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் உள்ள கிராமங்களுக்கு சாலை அமைப்பது குறித்தும் பயன்பாட்டில் உள்ள சாலையை தற்காலிகமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்