விழுப்புரம் மாவட்டத்தில் - நாளை 784 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியது,

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 12 மற்றும் 19-ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் ‘மெகா கரோனா தடுப்பூசி முகாம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இம்முகாமில் தமிழகம் முழுவதும் பொது மக்கள் அனைவரும் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைத்தனர். இதுவரை பொது மக்கள் சுமார் 10,02,086 தடுப்பூசி பெற்று பயன்பெற்றனர்.

நாளை (செப். 26) மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. விழுப்புரம்ட மாவட்ட அளவில் 784 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

சுமார் 71 ஆயிரம் பேர் தடுப்பூசி பெற்று, பயன்பெறும் வகையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் கரோன தடுப்பூசி பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்