கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், துப்பறியும் மோப்ப நாய்களுக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு தமிழகத்தின், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த ரூனி என்ற 2 வயது டாபர்மேன் இன மோப்ப நாய்க்கு 6 மாத காலம் அளிக்கப்பட்ட பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுதொடர்பாக, மோப்ப நாய் பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கண்டறிவது, குற்றவாளிகளை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவில், காவல் ஆணையரிடம் மோப்ப நாய் ரூனியை காட்டி ஒப்புதல் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரூனி திண்டுக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago