ராமேசுவரம் அருகே மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இரண்டு சுழல் காற்றுகள் அருகருகே தோன்றின.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ராமேசுவரம் அருகே மண்டபம் மன்னார் வளை குடா கடலில் கருமேகங்களுக்கு மத்தியில் நேற்று காலை 2 சுழல்கள் அருகருகே சுமார் 15 நிமிடங்கள் தோன்றியதாக மீன வர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரி கள் கூறியதாவது:
கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் ஏற்படும். பருவநிலை மாற்றத்தின்போது சுழல் ஏற்படுவதும், மீண்டும் 2 காற்றின் வெப்பநிலையும் சமமாக மாறும்போது சுழல் மறைந்து விடும். இந்த நிகழ்வின்போது கடல் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.
கடலில் அரிதாக நிகழக்கூடிய இத்தகைய சுழலை கடலோர மக்கள், மீனவர்கள் வானியல் ஆய்வாளர்கள் காண வாய்ப்பு அதிகம். இதுபோன்ற சுழல் காற்று மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் தோன்றுவது வழக்கம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago