சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூர் அருகே கண்டவராயன் பட்டியில் வல்லநாடு கருப்பர் மற்றும் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு காளைக்கன்று நேர்த்திக் கடனாக விடப்பட்டது. இக்கோயில் காளைக்கன்றை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து அதற்கு கிராம மக்கள் நெல், காய், கனிகளை கொடுத்து பரா மரித்து வந்தனர். இக்கோயில் காளை சுற்றுப் பகுதிகளில் நடந்த மஞ்சு விரட்டில் பரிசுகள் பெற் றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நலிவடைந்த காளை நேற்று மாலை இறந்தது. இதையடுத்து கோயில் காளையின் உடல் ஊர் மந்தை அருகே வைக்கப்பட்டது. கிராமத்தினர் வஸ்திரம், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago