ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் - சேலம் வந்த ரயில்கள் தாமதம் :

ரயில் இன்ஜின் தடம் புரண்டதால், பெங்களூருவில் இருந்து சேலம் வந்த ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக வந்தது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஓசூர்-சேலம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு பெங்களூருக்கு அருகேயுள்ள ஹீல்ஹள்ளி ரயில்வே நிலையம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, மினி லாரி மீது மோதியது. இதில், ரயில் இன்ஜின் தடம் புரண்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் இன்ஜினை ரயில் பாதையில் மீண்டும் நிறுத்தினர். இதனால், மயிலாடுதுறை ரயில் சேலம் ஜங்ஷன் நிலையத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்தது.

இதேபோல, மைசூர் -தூத்துக்குடி சிறப்பு ரயில், மும்பை -கோவை குர்லா விரைவு ரயில் உள்ளிட்ட அவ்வழிடத்தில் வந்த அனைத்து ரயில்களும் சேலத்துக்கு 3 மணி நேரம் காலதாமதமாக வந்தது. இதனால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்