கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் காட்டியதால், அதிமுகவைச் சேர்ந்த திருச்சி முன்னாள் எம்.பி ப.குமார் சிறந்த விவசாயிக்கான பரிசு பெற உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் குருங் குளம் அறிஞர் அண்ணா சாக்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரைவைப் பருவத்தில் ஏக்கருக்கு அதிக விளைச்சல் மற்றும் ஆலைக்கு அதிக டன்கள் கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. அதன்படி, 2020-2021-ம் ஆண்டுக்கான பரிசு பெறும் விவசாயிகளின் பட்டியலை நேற்று சர்க்கரை ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் கிராமத்தில் ஏக்கருக்கு 70 டன் என 10 ஏக்கரில் 700 டன் கரும்பை விளை வித்து ஆலைக்கு அனுப்பிய விவசாயியான, திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமாருக்கு அதிக மகசூல் காட்டியதற்காக பரிசு வழங்கப்படுவதாக கரும்பு ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ச.செல்வசுரபி கூறியது: சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில், அதிக மகசூல் மற்றும் அரைவைக்கு அதிக கரும்பை அனுப்பிய விவசாயிகளின் பட்டியலை ஆய்வு செய்து, அதில் இந்த ஆண்டுக்கான 8 சிறந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், முன்னாள் எம்பி. ப.குமார் பெயரும் இடம்பெற்றுள்ளது. பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று (செப்.22) ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago