தஞ்சாவூரில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு லாரியில் கடத்தப்பட இருந்த 15 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் இரவு கைப்பற்றினர்.
தஞ்சாவூர் மாதாகோட்டை புறவழிச்சாலையில், மாதாகோட் டையைச் சேர்ந்த செல்வம் என்பவ ருக்கு சொந்தமான இடத்தி லிருந்து, வெளி மாவட்டத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தஞ்சாவூர் வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், மண்டலத் துணை வட்டாட்சியர் செந்தில் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையினரும் அங்கு நேற்று முன்தினம் இரவு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, தஞ்சாவூர் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசியை அரைவை ஆலைகளில் குருணை யாக அரைத்து, மூட்டைகளில் நிரப்பி நாமக்கல் மாவட்டத்துக்குக் கோழி தீவனத்துக்காக அனுப்ப, 3 சரக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசி குரு ணையை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். மேலும், அங்கி ருந்த ஒரு கொட்டகையில் ரேஷன் அரிசியை குருணையாக உடைத்து 50-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் அடுக்கி வைத்திருந்தனர்.
இவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், தஞ்சாவூர் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரிஷிட் மேரியிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து 15 டன் எடை அளவிலான ரேஷன் அரிசி, 1 லாரி, 3 சுமை ஆட்டோகள் பறி முதல் செய்யப்பட்டன. இடத்தின் உரிமையாளரான செல்வம், அங்கு பணியில் இருந்த 8 கூலித் தொழிலாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago