ஜேஇஇ ரேங்க் பட்டியலில் - அலன் கேரியர் மாணவர்கள் 6 பேர் அகில இந்திய அளவில் முதலிடம் :

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரை தலைமையிடமாகக் கொண்ட அலன் கேரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனம் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், 2021 ஜேஇஇ மெயின் தேர்வு (4-வது அமர்வு) முடிவுகள் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வின் ஒருங்கிணைந்த அகில இந்திய ரேங்க் பட்டியலை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அலன் கேரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இயக்குநர் பிரஜேஷ் மகேஷ்வரி கூறியதாவது:

ரேங்க் பட்டியலில் மொத்தம் 18 பேர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இதில் அன்சுல் வர்மா, சித்தாந்த் முகர்ஜி,மிருதுள் அகர்வால், காவ்யா சோப்ரா, புல்கிட் கோயல், குர்அம்ரித் சிங் ஆகிய 6 பேரும் அலன் நிறுவனத்தில் பயின்றவர்கள். ஜேஇஇ பல்வேறு அமர்வுகளில் அவர்கள் 300-க்கு 300 மதிப்பெண் பெற்றவர்கள். 7, 8, 10-வது இடங்களையும் அலன் நிறுவன மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அலன் மாணவர்கள் டாப்-50 பட்டியலில் 22 பேர், டாப்-100பட்டியலில் 43 பேர், டாப்-200 பட்டியலில் 81 பேர், டாப்-500 பட்டியலில் 159 பேர் இடம்பிடித்துள்ளனர். 17,444 பேர் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேரடி வகுப்பு மட்டுமின்றி, தொலைதூரக் கல்வியில் பயின்றவர்களும் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இந்த சவாலான சூழலில் மாணவர்கள் இடையூறின்றி பயிற்சி பெறஎங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பை வழங்கியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE