விழுப்புரம் குழந்தைவேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் திருப்பதி பாலாஜி தலைமையில். அச்சங்க நிர்வாகி கள் ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித் தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்களின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் வி.ஏ.ஓ. நகர்சாலையில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்கு தடுப்புச் சுவர் அமைத்து கொடுத்ததற்கு ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கோவிந்தசாமி நகர் பகுதியில் கட்டி முடிக்கப் பட்டு திறக்கப்படாமல் பல ஆண்டு களாக காட்சிப் பொருளாகவே இருக்கும் சமுதாய நலக்கூடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் நாள்தோறும் 1 லட்சம்லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சுவ தால் எங்கள் குடியிருப்பு பகுதியில்நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத் திற்கு சென்று விட்டது. இதனால் 5 ஆயிரம் குடியிருப்புகளுக்கு கடும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட் டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறி யுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago