விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் - சிறப்பாக செயல்பட்ட 12 தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மீட்புப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட 12 வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் கேஸ்ட்ரோ வழங்கினார்.

தென்பெண்ணை ஆற்றில் இறங்கி சடலத்தை மீட்ட விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் செந்தில்முருகன், சுந்தரமூர்த்தி, கிணற்றில் விழுந்த பூனையை உயிருடன் மீட்ட திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சுரேஷ் லூர்து சேவியர், காலேஷா, ராஜீவ்காந்தி, ரமணன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது. இதேபோல் குளத்தில் இருந்து சடலத்தை மீட்ட வானூர் தீயணைப்பு வீரர்கள் சிவக்குமார், செல்வகுமார், கிணற்றில் விழுந்த சினைப்பசுவை உயிருடன் மீட்ட மரக்காணம் தீயணைப்பு வீரர்கள் வினோத், செல்வக்குமார், கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட செஞ்சி தீயணைப்பு வீரர்கள் சுதாகர்,ராஜ்குமார், கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் சிவக்குமார், சுரேஷ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிய மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின் கேஸ்ட்ரோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் தீ விபத்து தொடர்பாக 42 அழைப்புகள் வந்தன.

இதில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பு பொருட்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவங்களில் ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பு பொருட்கள் சேதமடைந்துள்ளன என்றார். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சங்கர், விழுப் புரம் நிலைய அலுவலர் முகம்மது முராத் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்