ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஏரல் அருகே அகரம் பகுதியை சேர்ந்த ஐசக் மகன் பொன்சீலன் என்ற சிங்கம் (39). முன்விரோதம் காரணமாக இவரை கடந்த மாதம் 18-ம் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு,பொன்சீலன் அணிந்திருந்த நகைகளை திருடிச்சென்றது.
இதுதொடர்பாக ஏரல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அகரத்தைச் சேர்ந்த ரூபன்(40), பாலகிருஷ்ணன்(27), நவநீதன்(27) ஆகியோர் உட்பட 9 பேரை கைது செய்து, நகைகளைமீட்டனர். கைது செய்யப்பட்ட ஜெகன் (40), ஜெபசிங் சாமுவேல் (30), ஜெபஸ்டின் (25), பெனித்நியூட்டன் (23), மாரிமுத்து (26), ரூபன் தேவபிச்சை (27) ஆகிய 6 பேர் மீது குண்டர் தடுப்புசட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில்6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 136 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago