பாளை. ஜவஹர் மைதானத்தில் தற்காலிக கடைகள் :

பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத் தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நாளை (20-ம் தேதி) தொடங்கவுள்ளது.

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால், அதைஇடித்து அப்புறப்படுத்தி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்ட அரசுஅனுமதி அளித்துள்ளது. காந்தி மார்கெட் கடை குத்தகைதாரர்கள் மாற்று இடம்வழங்க வேண்டும் என்றும், ஜவஹர் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்க வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தினர். அதே நேரத்தில் ஜவஹர் மைதானத்தில் கடைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள்மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குத்தகைதாரர்களுக்கு மாற்று இடம் வழங்கி, புதிய கட்டிடப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து தற்காலிக கடைகள் அமைப்பது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். வாகனங் களை எருமைகிடா மைதானத்துக்கு மாற்றம் செய்யவும், ஜவஹர் மைதானத்தை உடனடியாக காலி செய்யவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் நாளை தொடங்க இருப்பதால் திருநெல்வேலி மாநகராட்சிக்கு எவ்வித இடையூறுமின்றி மைதானத்தை காலி செய்ய வேண்டும் என்றும் ஆணையர் அறிவுறுத்தினார்.

`ஜவஹர் மைதானத்தை வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்த கூடாது’ என வட்டார போக்குவரத்து அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 136 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE