ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் இன்று 1,144 மையங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சுகாதாரத் துறை யால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு மற்றும் உயிரிழப்புகளை குறைக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் அதிகளவில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண் டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டாலே கரோனா பாதிப்பில் ஐ.சி.யு சிகிச்சைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழக அளவில் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 23 லட்சத்துக்கும் அதிக மான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக் கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அளவிலான மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட அளவில் நடைபெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 57 ஆயிரத்து 201 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 149 பேர் முதல் தவணையும், 1 லட்சத்து 76 ஆயிரத்து 52 பேர் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 558 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 4 லட்சத்து 42 ஆயிரத்து 173 பேர் முதல் தவணையும், 85 ஆயிரத்து 385 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத் திக்கொண்டுள்ளனர். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 168 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில், 4 லட்சத்து 21 ஆயிரத்து 755 பேர் முதல் தவணையும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 413 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
சிறப்பு முகாம்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.வேலூர் மாவட்டத்தில் 343 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என சுமார் 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் 301 சிறப்பு முகாம்கள் அமைக்கவும் அதற்கான விழிப்புணர்வு பணிகளை ஏற்பாடு செய்யவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்டத்தில் கையிருப்பில் மட்டும் சுமார் 33 ஆயிரம் டோஸ் தடுப்பூசி இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,144 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago