சுய தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஈரோட்டில் இணையவழியில் பயிற்சி :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், ‘திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மார்க்கெட்டிங்’ தொடர்பான மூன்று நாள் பயிற்சி முகாம் இணையதளம் வாயிலாக நடக்கிறது.

சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கான இந்த பயிற்சி முகாம், வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. என்ன தொழில் தொடங்கலாம், அதற்கான சந்தை வாய்ப்புகள், இயந்திர விவரங்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கியில் கடன் பெற தேவையான விவரங்கள், அரசு மானியம் பெற வழிமுறைகள், பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்தல் போன்றவை தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

துறைவாரியாக நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள், வங்கி அதிகாரிகள், தொழில் அதிபர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கவுள்ளனர். அரசுத் துறையில் மானியத்துடன் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்யவும் உதவி அளிக்கப் படவுள்ளது.

பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும். சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பயிற்சி முகாமில் பங்கேற்க 94439 47849, 97878 20202 என்ற எண்களில் பதிவு மேற்கொள்ளலாம் என ஈடிசியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்