சேலம் மாவட்டத்தில் 27-ம் தேதி : குடற்புழு நீக்க சிறப்பு முகாம் :

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வார விழா வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வரும் 27-ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய குடற்புழு நீக்க வாரம் வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான குடற்புழு நீக்கும் சிறப்பு முகாம் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. முகாமில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட்சோல்) இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், முகாமில் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு (கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) இலவசமாக அல்பெண்டசோல் மாத்திரை வழங்க திட்டமிட்டுள்ளது.

முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும். மேலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தேவைக்கேற்ப நடைபெறும். இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகள் 11,11,084 பேரும், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 2,24,827 பேரும் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்