புதிய தொழில்நுட்பத்தில் சாலை அமைப்பதை ஆய்வு செய்த பிற மாநில பொறியாளர்கள் :

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் மூலம் கரூர் மாவட்டத்தில் 188.06 கி.மீ தொலைவுக்கு சாலைப் பணிகள் ரூ.92.63 கோடி மதிப் பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இதில் 51.99 கி.மீ நீளமுள்ள 12 பணிகளில், நடைமுறையில் இல்லாத புதிய தொழில்நுட்பத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, அந்தப் பகுதிகேற்ற வகையில், அப்பகுதி மண்ணுடன் சிமென்ட்டை கலந்து பயன்படுத்தி, ஜல்லிகளை கொண்டு குறைந்த செலவில் நீண்ட காலத்துக்கு சேதமடையாமல் இருக்கும் வகை யில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த புதிய தொழில்நுட்பத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில், கரூர்- திண்டுக்கல் சாலை முதல் கரூர்- ஈசநத்தம் சாலை வரை, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கலாபுரம்- பூஞ்சோலை சாலை ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் சாலை அமைக்கும் பணியை அறிந்து கொள்வதற்காக, 16 மாநிலங்களில் இருந்து வெவ் வேறு நிலையில் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் ஐஐடி, தேசிய சாலை தர கட்டுப்பாடு நிறுவனம் மற்றும் மற்ற மாவட்டங் களிலிருந்து 20 உதவி பொறி யாளர்கள் என 38 பொறியாளர்கள் கரூர் வந்திருந்தனர். அவர்கள், கரூர்- ஈசநத்தம் சாலையில் வெள்ளியணை அருகேயுள்ள ஜல்லிப்பட்டி, அரவக்குறிச்சி, பூஞ்சோலை சாலை ஆகியவற்றை ஆட்சியர் த.பிரபுசங்கர் முன்னிலை யில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்