தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணமுர்த்தி தலைமை வகித்தார்.

திருச்சி கள விளம்பர அலு வலர் கே.தேவி பத்மநாபன் பேசியபோது, “கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உறுதி செய்யவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் செப்டம்பரில் நாடு முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம் கடைபி டிக்கப்படுகிறது. நிகழாண்டு, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் முதல் வாரத் தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது, 2-வது வாரத்தில் யோகா மூலம் ஆரோக்கியம், 3-வது வாரத்தில் பயனா ளிகளுக்கு அங்கன்வாடி மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல், 4-வது வாரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது ஆகியவை கருப்பொருள்களாக இடம் பெற்றுள்ளன” என்றார்.

கொளக்காநத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மகா லட்சுமி பேசியபோது, “குழந் தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்ச் சியில், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைக் குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்