பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு - அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு :

By செய்திப்பிரிவு

பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங் களில் ஆட்சியர் அலுவலகங்கள் உட்பட பல்வேறு அரசு அலுவல கங்களில் நேற்று சமூக நீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.

பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடித்து, அரசு அலுவலகங்களில் உறுதிமொழி யேற்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியாரின் படத்துக்கு ஆட்சியர் சு.சிவராசு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சமூக நீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங் கேற்றனர்.

இதேபோல, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் தலைமையில் அனைத்து ஊழியர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி முன்னிலை யில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மெரீனா, ஊராட்சி கள் உதவி இயக்குநர் சந்தானம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுமொழியேற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்(பொது) தி.சுப்பையா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர். இதேபோன்று, மாவட்ட மனநல திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் தலைமையில் பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை யில் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழி யர்கள் சமூக நீதி நாள் உறுதி மொழியேற்றனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்துத் துறை ஊழியர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி யேற்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், ஆட்சியர் ரா.லலிதா தலைமையில் அனைத் துத் துறை ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் உட்பட அனைத்துத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல, மத்திய மண்டலத் தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று சமூக நீதி நாள் உறுதிமொழியேற் கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்