பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் செல்வக்குமார் (எ) ஸ்டாலின் (30). பெரம்பலூரில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர், குடும்பச் சூழல் காரணமாக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்ததாகவும், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டு மிகுந்த அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்டாலின் நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago