கடலூர் சில்வர் பீச்சில் கடைகளை திறக்க வேண்டும் : சிறு வியாபாரிகள் எஸ்பியிடம் முறையீடு

By செய்திப்பிரிவு

கடலூர் சில்வர் பீச்சில் கடை களை திறக்க அனுமதிக்க வேண்டும்என்று மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சக்தி கணேசனிடம் வணிகசங்க பிரதிநிதிகள் மனு அளித்த னர்.

சில்வர் பீச்சில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் சுவாமி விவேகானந்தர் கடல் தாய் சிறு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் என்ற சங்கத்தை நடத்தி வருகின்றனர் இதன் தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் தங்கதுரை, செயலாளர் நாகரா ஜன், துணை செயலாளர் சந்திர லேகா, பொருளாளர் ராமன் மற்றும்வியாபாரிகள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

இந்த மனு தொடர்பாக அச்சங் கத்தினர் கூறுகையில், “கடலூர் சில்வர் பீச்சில் 130க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாங்கள் அனைவரும் இந்த தொழிலை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். கரோனா காரணமாக பல மாதங்களாக கடைகள் திறக் கப்படாத நிலையில், சமீபத்தில் தான் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். ‘ஞாயிற் றுக்கிழமை மட்டும் தான் கடைகள் வைக்கக் கூடாது’ என்று அரசு உத் தரவிட்டது. ஆனால், போலீஸார் திடீரென எந்த நாளும் கடைகளை வைக்கக்கூடாது என்று கூறி விட்டனர்.

இது பற்றி நகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தால், ‘போலீ ஸார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களைச் சந்தித்து பேசுங்கள்’ என்கிறார்கள். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் எங்க ளுக்கு சில்வர் பீச்சில் மீண்டும் கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும். இதை குறிப்பிட்டு மனுஅளித்திருக்கிறோம். மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி, இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்