வானூர் அருகே பட்டானூர், கலைவாணி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகனம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
வானூர் அருகே பட்டானூர் கிராமத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவர் தன் சொந்த நிலம் அருகே உள்ள அரசு நீர்நிலைக் குட்டைகள், மேய்ச்சல் நிலங் களை ஆக்கிரமிப்பு செய்து முள் வேலி போட்டுள்ளார். இவர் தன் நிலத்தை மனைகளாக விற்பனை செய்யும்போது, ஆக்கிரமிப்பு நிலங்களையும் விற்பனை செய்து வருகிறார். உடனடியாக அரசு தரிசு நிலம் மற்றும் நீர் நிலை அரசாணை எண் 540ன் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
இம்மனுவில் நகலை முதல்வரின் தனிப்பிரிவு, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள் ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago