பரமக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் போல் நடித்து பெண்ணிடம் ரூ.1.19 லட்சத்தை மர்ம நபர் அபகரித்து சென்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மனைவி பாண்டியம்மாள்(50). இவருக்கு 2 குழந்தைகள். கண வர் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் பாண் டியம்மாள் புட்டுக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் பரமக்குடி காந்திஜி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தான் அடகு வைத்த 5 பவுன் நகையைத் திருப்புவதற்குச் சென்றார். வங்கிக்குள் இருந்த போது டிப்டாப் உடை அணிந்த ஆண் ஒருவர், தான் வங்கி மேலாளர் குமார் எனக் கூறி வாடிக்கையாளர்களுக்கு கடனில் சிலவற்றையும், வட்டியையும் தள்ளுபடி செய்கிறோம், ரெவின்யூ ஸ்டாம்பும், டைப் செய்த மனுவும், அஞ்சலகத்தில் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து தான் நகை திருப்பக் கொண்டு வந்த ரூ.1.19 லட்சத்தை அவரிடம் கொடுத்து விட்டு, அஞ்சலகம் சென்றார். அங்கு கேட்டபோது இதுபோன்ற மனு வழங்குவதில்லை எனக்கூ றியதும், மீண்டும் வங்கிக்குத் திரும்பினார். அங்கு தன்னிடம் பணம் வாங்கிய நபரை தேடி யபோது காணவில்லை. விசாரித் ததில் அப்படிப்பட்ட நபர் யாரும் வங்கியில் வேலை பார்க்கவில் லை எனத் தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாண்டியம்மாள் பரமக் குடி நகர் போலீஸில் புகார் அளித் தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago