பருவமழை வேண்டி பூக்குழி இறங்கிய பக்தர்கள் :

By செய்திப்பிரிவு

முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளம் கோயிலில் பருவமழை பெய்ய வேண்டி பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தில் பூங்குளம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அய்யனார், சுடலை மாடசாமி, சேதுமாகாளி, கருப்பசாமி உள்ளிட்ட 23 தெய்வங்கள் உள்ளன. இங்கு ஆவணி மாதத் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பூஜை, பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. நள்ளிரவில் சுடலைமாடனுக்கு பூஜை கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், பருவமழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் நேற்று அதிகாலை பூக்குழி இறங்கினர். இதையடுத்து சேதுமாகாளியம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்தும், கிராம மக்கள் சூரியப் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். பிறகு மயான பூஜை, பூஜை பெட்டி எடுத்துச் செல்லுதல், கோயிலில் புண்ணியதானம் செய்தலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்