திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2020-21-ம் ஆண்டு அரவை பருவத்தில், கரும்பு அளித்த 1,300 விவசாயிகளுக்கு ரூ.22.69 கோடி கரும்பு நிலுவைத் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்து, 100 சதவீத மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளும், 75 சதவீத மானியத்தில் பெரு விவசாயிகளும் சொட்டுநீர் பாசனம் அமைத்து கரும்பு நட்டு அதிக மகசூல் மற்றும் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் கரும்பு பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக கோட்ட கரும்பு அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பாண்டு அரவை பருவத்துக்கு கரும்பை அனுப்பி வைத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago