சர்வதேச அளவில் சிறந்த கல்வியாளராக : ஆம்பூர் அரசு பள்ளி ஆசிரியர் தேர்வு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேம் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சரவணன் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட்டின் சிறந்த கல்வியாளராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தகவல் தொழில் நுட்பம் மூலம் சிறந்த முறையில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு இலவச மென் பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த மென் பொருட்களை கொண்டு ஆசிரி யர்கள் கற்கவும், தங்கள் கற்பித்தலை அரசுப்பள்ளி மாண வர்களுக்கு எடுத்துச் சொல்லவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘Microsoft Education Community’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலக அளவிலான ஆசிரியர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும், தகவல் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் வசதி களை செய்துள்ளது.

ஆசிரியர்கள் தங்களது இ-மெயில் முகவரியை மைக்ரோ சாப்ட் உடன் இலவசமாக இணைக் கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பாடங்களை இணையதளம் வழியாக கற்றுக் கொள்ளவும், அதற்கான சான்றிதழ்கள், புள்ளிகளை ஆசிரி யர்கள் பெற முடியும். குறிப்பாக, அதிக அளவில் சான்றிதழ்கள் மற்றும் புள்ளிகள் பெறும் ஆசிரியர்களுக்கு ‘மைக்ரோசாப்ட் பயிற்சியாளர்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறந்த கல்வியாளராக தேர்வு செய்கிறது. அதேபோல, மைக்ரோசாப்ட் கல்வியாளர்களின் சிறப்பாக செயலாற்றும் ஒரு சிலருக்கு மட்டும் உலக அளவில் சிறந்த கல்வியாளராக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக் கான சிறந்த கல்வியாளராக ஆம்பூர் பெத்லகேம் அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சரவணனை மைக்ரோசாப்ட் நிறுவனம் தேர்வு செய்து அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. ஆம்பூரைச் சேர்ந்த அரசுப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் சரவணன் நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்களை கற்பித்து வருகிறார்.

கரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகள் திறக்காத போது தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார். மைக்ரோசாப்ட் மென்பொருள் மூலம் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளையும் ஆசிரியர் சரவணன் நடத்தி வருகிறார்.

இது குறித்து ஆசிரியர் சரவணன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகமெங்கும் உள்ள ஆசிரியர்களில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து தங்கள் வகுப்பறை செயல் பாடுகளை பகிர்ந்துக்கொள்ளவும், அரசுப்பள்ளி மாணவர்கள் உலகில் உள்ள எந்த மாணவர்களுடன் பேசவும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும் வாய்ப் பளிக்கும் விதமாக MIE என்ற சான்றிதழை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், ஆம்பூர் பெத்லகேம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளி சர்வதேச அளவில் தொழில் நுட்பத்தை பயன்படுத்திய சிறந்த பள்ளியாக தேர்வு செய்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

உலக அளவில் சிறந்த ஆசிரியராக மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப் பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் சரவணனை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்