தண்டராம்பட்டு அருகே குடிநீர் குழாயை சீரமைக்க சென்றவர்களை தடுத்த வனத் துறையினரை கிராம மக்கள் முற்றுகை யிட்டனர்.
தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சேர்ப்பாப்பட்டு ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக் கும், வாச்சிராப்பட்டு பெரிய ஏரி பகுதியில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ராதாபுரம் காப்புக் காடு பகுதி வழியாக வந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. அதனை ‘பொக்லைன்’ இயந்திரம் கொண்டு சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போது அவர்கள் அனுமதி பெறவில்லை என கூறி வனத்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இதையறிந்த கிராம மக்கள் வனத் துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago