சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில் கடலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது.
சங்க மாவட்ட துணைதலைவர் சீனுவாசன்தலைமை தாங்கினார். சங்க கொடியினை மாவட்டத் துணைத் தலைவர்கள் குப்புசாமி,நடராஜன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். சங்க மாநில உதவி செயலாளர் பாலகிருஷ்ணன், சிஐடியூ மாநிலக்குழு வேல்முருகன், ஜீவானந்தம், துணைசெயலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைதலைவர் கருப்பையன் மாநாட்டு நிறையுரையாற்றினார்.
இதில் கட்டுமானதொழிலாளர்களுக்கு எங்கு விபத்து நடந்தாலும் ரூ. 5 லட்சமும், இயற்கை மரணத்திற்கு ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களின் குழந் தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago