கடலூர் மாவட்டத்தில் வட்டத்திற்கு ஒரு ஆண்கள், ஒரு பெண்கள் என இரு புதிய அரசு கலைக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன் தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தயாதமிழன்பன் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பரசு முருகையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் நேற்றுமுன்தினம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியத்திடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மாணவர்களின் எண் ணிக்கைக்கு ஏற்ப கலைக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை தற்போது உள்ளதை விட இரு மடங்கு அதிகப்படுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திற்கும் 2 புதிய அரசு கலைக் கல்லூரிகள் ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் உடனடியாக நிறுவ வேண்டும்.
அந்த கல்லூரி அமைக்க தாமத மாகும்பட்சத்தில் தற்போதுள்ள கல்லூரிகளில் ஷிப்ட் முறையில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். கடலூர் பகுதியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தினந்தோறும் கல்லூரி வாசலில் காத்து கிடக்க வேண்டிய அவலமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மருத்து வம், பொறியியல், வேளாண்மை, சட்டம் ஆகிய கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு இடம் கிடைக்காத பட்சத்தில் குறைந்த பட்சம் கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க தமிழக அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago