சிறு, குறு விவசாயிகள் சான்று பெற தஞ்சாவூரில் நாளை சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம் நாளை (செப்.7)நடைபெற உள்ளது என தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீர் பாசனத்துக்காக ரூ.4.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம், உளுந்து, எள் போன்ற பயிர்களுக்கு மழைத்தூவுவான் மற்றும் தெளிப்பு நீர்க்கருவிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி 100 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த மானியம் பெற வட்டாட்சியரால் வழங்கப்படும் சிறு, குறு விவசாயிக்கான சான்று அவசியமாகும். இதற்கான சான்று பெற நாளை (செப்.7) தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, சிறு மற்றும் குறு விவசாயிக்கான சான்று பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புதல் சீட்டுடன் நாளை (செப். 7) நடைபெறும் சிறப்பு முகாமுக்கு வந்து சிறு, குறு விவசாயிகள் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

விவசாயிகள் இந்த அரிய வாய்பை பயன்படுத்தி சிறு, குறு விவசாய சான்று பெற்று அரசு வழங்கும் மானிய திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்