திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் ஆவணித் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
கோயிலில் உள்ள கொடிமரத்தில் நேற்று காலையில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர், கொடிமரத்துக்கு 16 வகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 15-ம் தேதி கோயில் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago