கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும்ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி தமிழக அரசுகவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில்பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடுஅரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 385 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். அதில், கோவை மாவட்டத்தில் இருந்து 13 ஆசிரியர்கள் தேர்வாகி யுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் மை.லிட்வின், பொள்ளாச்சி பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ந.பாலமுருகன், கோவை குரும்பப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இரா.விஜயராகவன், கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் து.பிராங்கிளின், ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வெ.அ.அமானுல்லா, மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.இந்திரா, சூலூர் ஒன்றியம் நாகம நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செ.ரஞ்சிதம், கோவை ஆறுமுககவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ர.சத்யபிரபா தேவி, கோவை பிரஸ்காலனி ஒன்னிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ப.சுகுணாதேவி, தொண்டாமுத்தூர் ஒன்றியம், கல்வீரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.ச.மகாலட்சுமி, கோவை ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வெ.கீதா,சூலூர் செஞ்சேரி, ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ப.மரகதம், ஒண்டிபுதூர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அ.மரியஜோசப் ஆகியர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
உதகை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முக்கட்டி அரசு பழங்குடி யினர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், பென்னை அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் ஆகியோர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சமுத்திரபாண்டியன், தேவாலா அரசு பழங்குடியினர் பள்ளி சார்பில், மாணவர்களை தேசிய திறனறிவுத் தேர்வில் பங்கேற்கச் செய்து வெற்றி பெறச்செய்துள்ளார். முக்கட்டி அரசு பழங்குடியினர் பள்ளியின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார்.
இதேபோல பல கிராமங்களுக்கு சென்று, பள்ளி செல்லா பழங்குடியின மாணவர்களை கண்டறிந்து, தான்பணிபுரியும் பள்ளியில் சேர்த்து, கல்வி கிடைக்க முருகேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சேவைகளை பாராட்டி, மாநில நல்லாசிரியர் விருதுக்கு இருவரையும் மாநில அரசு தேர்வு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago