விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘‘வேலூர் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பாலாறு உள்ளது. விரிஞ்சிபுரம் பகுதியில் தடுப்புச் சுவர் சிதிலமடைந்துள்ளதால் தற்போது பாலாற்றில் தண்ணீர் வரத்து இருந்தும் ஏரிகளுக்குச் செல்லவில்லை. இதனால், சதுப்பேரி மற்றும் பெரிய ஏரி, கடப்பேரி, தொரப்பாடி ஏரிக்கு நீர்வரத்து இல்லை என்பதால் உடனடியாக தண்ணீரை மடை மாற்றி ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago