நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.
எலக்ட்ரீஷியன், ஒயர்மேன், சர்வையர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், டிராப்ட்மேன் சிவில் முடித்தவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வயது சான்றிதழ், சாதித் சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, ஆதார் கார்டு, தேசிய தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது. ஓராண்டு கால பழகுநர் பயிற்சியின்போது மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago