ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணமில்லா திறன்மேம்பாட்டு பயிற்சி :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவ, மாணவியர் தகுதிக்கேற்ப தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள www.training.tahdco.com என்ற இணைய தளத்தின் வழியே பதிவேற்றம் செய்து, கட்டணமின்றி பயிற்சி பெறலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கப்படுவதோடு, பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மாணவர்கள், தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர் களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெறலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 0424-2259453 என்ற தொலைபேசியின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்