நெல்லிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த இடம் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

நெல்லிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகராட்சி மருந்தகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம், சித்தா பிரிவு என மூன்று பிரிவுகள் இயங்கி வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மகப்பேறு பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், மருத்துவமனை வளாகங்கள் மற்றும் வார்டுகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தொற்று பரவா வண்ணம் தூய்மையாக வைத்திருக்கவும், கரோனா பரவலை கட்டுப்படுத்த தினசரி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும் மருத்துவமனை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து நெல்லிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்காக அதன் அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்வது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் மீரா, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்