நாமக்கல் மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது, என மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (1-ம் தேதி) மாலை 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 8-ம் தேதி மாலை 3 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
இதுபோல் 15-ம் தேதி மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற் பொறியாளர் அலுவலகத்திலும், 22-ம் தேதி மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடை பெறுகிறது.இதில் அந்தந்த கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago