போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனி அருகில் போக்குவரத்து சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் தலைமை வகித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது என வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், செங்கோட்டை உட்பட பல்வேறு பணிமனைகள் அருகில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மண்டல பொதுமேலாளர் அலுவலக வாயிலில் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில குழு உறுப்பினர் பெருமாள்முன்னிலை வகித்தார். இணைபொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி பொதுச்செயலாளர் உலகநாதன், போக்குவரத்து தொழிலாளர் பணியாளர் சம்மேளன நிர்வாகி சந்தானம், எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், மதிமுக தொழிற்சங்க நிர்வாகி மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல், திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட 18 பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செங்கோட்டை உட்பட பல்வேறு பணிமனைகள் அருகில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE