புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸூக்கும், சட்டப்பேரவைக்கும் எதிரே அமைந்துள்ளது பாரதி பூங்கா.
இயற்கையான சூழலில் உள்ள இப்பூங் காவின் நடுவே புதுச்சேரி சின்னமான ஆயி மண்டபம் உள்ளது. இப்பூங்காவில் நடைபயிற்சிக்கு ஏராளமானோர் வருவார்கள். அரசு மருத்துவமனைக்கு வருவோர் ஓய்வு எடுப்பார்கள். அத்துடன் விளையாட்டு சாதனங்களில் விளையாட குழந்தைகள் ஏராளமானோர் இங்கு வருகிறார்கள்.
பல குழந்தைகள் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற சாதனங்களில் விளையாடுகிறார்கள். ஆனால் சிறுவர்கள் விளையாடும் சாதனங்கள் பராமரிப்பில் லாமல் உள்ளன.
பூங்காவில் இற்றுப்போன கம்பிகள், உடைந்தும் பயனற்றும் போன விளையாட்டு சாதனங்கள், துருபிடித்த இரும்பு கம்பிகள் என அபாயத்தை மறைத்தபடி விளையாட்டு சாதனங்கள் காட்சி தருகின்றன. சறுக்கு விளையாட்டில் கான்கிரீட் உடைந்து கம்பிகள் நீட்டியபடி இருக்கும் அபாயத்தை தாண்டி குழந் தைகள் விளையாடுகின்றனர்.
குழந்தைகள் விளையாடும் சாதனங் களில் இரும்பு பைப்புகளில் சங்கிலி அறுந்து காணப்படுகிறது. அத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட சாதனங்களும் உடைந்து போய் உள்ளன.
பெற்றோர் தரப்பில் கூறுகையில், “குழந்தைகள் விளையாடும் சாதனங்கள் பல துருப்பிடித்தும் உடைந்தும் கிடக்கின்றன.
குழந்தைகளை தாண்டி பலரும் இதை பயன்படுத்துவதும் முக்கியக் காரணம். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத நகராட்சி தரப்பு ஏதேனும் அசம்பாவி தம் நிகழும் முன்பு சரிசெய்ய வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago