வேளாண் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடங்களில் நெல்லை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் திரு வாரூர் விற்பனைக்குழுவின் கட் டுப்பாட்டில் திருவாரூர், பூந்தோட் டம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி, வடுவூர், திருத் துறைப்பூண்டி, கொரடாச்சேரி ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல் பட்டு வருகின்றன. இவற்றில் மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி, வடுவூர் ஆகிய இடங்க ளில் விவசாயிகளின் விளை பொருட்களை இருப்பு வைப்ப தற்காக நவீன கிடங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, திருவாரூர் மாவட் டத்தில் ஏறத்தாழ 54,944 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், டிசம்பர் 2-வது வாரத்திலிருந்து அறுவடைப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்ய உள்ள நெல்லை மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர் பகுதிகளில் உள்ள கிடங்குகளில் அதிகபட்சமாக 180 நாட்கள் வரை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம். இதில், முதல் 15 நாட்களுக்கு வாடகை செலுத்த தேவையில்லை.
மேலும், இங்கு இருப்பு வைத்துள்ள நெல்லின் மீது சந்தை மதிப்பில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை, அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். இந்த பொரு ளீட்டு கடன் தொகைக்கு குறைந் தபட்சம் 5 சதவீத வட்டி வசூலிக் கப்படுகிறது.
இதேபோல, வியாபாரிகளும் இங்கு நெல்லை இருப்புவைத்து, அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். இதற்கு, 9 சதவீத வட்டி வசூலிக் கப்படுகிறது.
எனவே, திருவாரூர் மாவட்டத் தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, மன்னார்குடி விற்பனைக்கூட கண்காணிப்பாளர்- 9943172167, திருத்துறைப்பூண்டி விற்பனைக்கூட கண்காணிப் பாளர்- 9677870366, வடுவூர் விற்பனைக்கூட மேற்பார்வையா ளர்- 8072033110 ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago