நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பாக்கம் கோட்டூர் பிரதான சாலையைச் சேர்ந் தவர் செல்வம். இவர், திருக்கண் ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, 2,300 சதுர அடியில் வீடு கட்டி வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நாகை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குறிப்பிட்ட நிலம், வீடு ஆகியவற்றை திருக் கண்ணபுரம் சவுரிராஜ பெரு மாள் கோயில் செயல் அலுவலர் ரா.ராஜா சுவாதீனம் எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 25-ம் தேதி வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸாருடன் பாக்கம் கோட்டூருக்குச் சென்ற நீதிமன்ற அமீனா பி.மனோகரன், அங்கிருந்த செல்வத்தின் வீடு, நுழைவுவாயில் கேட் ஆகியவற்றை 8 பூட்டுகளால் பூட்டி, அவற்றின் சாவிகளை கோயில் நிர்வாக அதிகாரி ரா.ராஜாவிடம் ஒப்படைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago