திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் நேற்று கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலைய நடைமேடைகள், டிக்கெட் முன்பதிவு செய்யுமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம், குட்ஷெட் பகுதிகளை ஆய்வு செய்து, உரிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் மணீஷ் அகர்வால் கூறியது:
ரயில் நிலையங்களில் பயணி களின் வசதிகளை மேம்படுத் துவது குறித்து ஆய்வு செய்யப் பட்டது. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று படிப்படியாக குறையும் நிலையில், நிறுத் தப்பட்ட ரயில்களை மீண்டும் படிப் படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையான கேட்கீப்பர் உள் ளிட்ட பணியாளர்களை நியமனம் செய்தபிறகு, திருவாரூர்- காரைக் குடி ரயில் பாதையில் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ் சாவூர்- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் வழிப்பாதை அமைப் பதற்கான ஆய்வுப் பணிகள் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் தொடங் கப்படும். கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் களில், திருச்சி- காரைக்கால் மற்றும் திருவாரூர்- மயிலாடு துறை இடையேயான பயணி கள் ரயில்களை ஆக.30-ம் தேதி (நாளை) முதல் இயக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க நிர்வாகிகள் கும்பகோணம் ஏ.கிரி, பாபநாசம் டி.சரவணன், தஞ்சாவூர் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் வெ.ஜீவக்குமார், கண்ணன் உள்ளிட்டோர், ரயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர் வாலிடம் தனித்தனியாக அளித்த மனுக்களில், “திருச்சி- மயிலாடு துறை ரயில் பாதையில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். நடைமேடை கட்டணத்தை பழை யபடி குறைக்க வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர் விரைவு ரயில், செந்தூர் விரைவு ரயில்கள் பழையபடி நின்று செல்ல வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago