தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை மானிய கோரிக்கையின்போது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு தெரிவித் துள்ளனர்.
இதுதொடர்பாக, காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தரவிமல்நாதன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்க தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் க.பாலகுரு ஆகியோர் கூறியது: மத்திய அரசு கடந்த ஆண்டு கரோனா காலத்தில் பெருநிறுவன ங்களுக்கு ஆதரவான 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில், இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழக விவசாயிகளும் அவ்வப்போது டெல்லி சென்று, இந்தப் போராட் டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியின்படி நிறைவேற்றப் பட்டுள்ள இந்த தீர்மானத்தை அனைத்து விவசாயிகளின் சார் பில் வரவேற்கிறோம் என தெரி வித்தனர்.
இதேபோல, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தானே முன் மொழிந்து 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும், இதற்காக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவித் திருப்பதும் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்தது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago