தஞ்சாவூரில் அகற்றப்பட்ட நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் முன்னிலையில் நேற்று பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோட்டம் பகுதியில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து 22 அடி அகலத்துக்கு 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான இடத்தை தனியார் 3 பேர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தனர். இதனால், மழைநீர் தேங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தியது. மேலும், நீர் வழிப்பாதையில் 9 அடி அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அடிக்கடி விபத்துகளும் நேரிட்டு வந்தன. இதையடுத்து, அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி மனு அளித்தனர்.

அந்த இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியர் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, வருவாய்த் துறையினர், காவல் துறையினர் முன்னிலையில் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கட்டிடங்கள் நேற்று பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்