தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தீர்மான விளக்க வாயிற் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு சங்கத்தின் உட்கோட்டத் தலைவர் ஆர்.கந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் வி.காசிராஜா முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா, கடந்த 22-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.செம்புலிங்கம், உட்கோட்டப் பொருளாளர் அரிபுத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை யில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். 41 மாதபணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணைஅடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழக நெடுஞ்சாலைத் துறை யில் காலியாக உள்ள 5,000 பணி யிடங்களை நிரப்பி இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago