75-வது சுதந்திர தினத்தையொட்டி கரூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 5-ம் வகுப்பு வரையிலான ஓவியப் போட்டியில், ஆண்டாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவி கே.பிரதீபா முதலிடம், கரூர் சங்கர வித்யாலயா 3-ம் வகுப்பு மாணவி எஸ்.கவின் 2-ம் இடம், டிஎன்பிஎல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவி வி.டி.திய, பள்ளபட்டி ரோசி மழலையர் தொடக்கப் பள்ளி மாணவர் வி.எஸ்.சர்பாஸ் ஆகியோர் 3-ம் இடம் பெற்றனர்.
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான கவிதைப் போட்டியில் கரூர் அரசு மேல்நிலைப் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ல.நிஷாந்தினி முதலிடம், கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பா.ஜீவ 2-ம் இடம், புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளி வ.ஜனா 3-ம் இடம் பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில் கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் ப.யுதிஷ்யுகந்தனர் முதலிடம், கரூர் ஜெயப்பிரகாஷ் நகராட்சி நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி போதும்பொண்ணு 2-ம் இடம், தம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி அ.கீர்த்திகா 3-ம் இடம் பெற்றனர்.
9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான கவிதைப் போட்டியில், மண்மங்கலம் சரஸ்வதி வித்யாமந்திர் பிளஸ் 2 மாணவி த.ஜெய முதலிடம், கட்டளை உயர்நிலைப் பள்ளி மாணவி சு.சவுந்தர்யா, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ல.தர்ஷினி ஆகியோர் 2-ம் இடம், அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஜ.பாத்திமா தல்பிகா 3-ம் இடம் பெற்றனர். கட்டுரைப் போட்டியில், கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி த.கிருத்திகா முதலிடம், டிஎன்பிஎல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் ர.பாலமுருகன் 2-ம் இடம், புலியூர் ராணிமெய்யம்மை மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சு.யோகேஸ்வரி 3-ம் இடம் பெற்றனர்.
கரூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.மதன்குமார் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பா.மணிமுத்து வரவேற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago